முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தலைசுற்றல் காரணமாக கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. மேலும் அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்..
3 நாட்கள் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல் பணிகளை கவனித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்..
இந்த நிலையில் இன்றும் காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.. அப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் நிலை, மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்..
தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உள்ள பயனாளிகளுடனும் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்..
தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார். மக்களின் கோரிக்கை விவரங்களை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.. அவர் 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்தபடியே மக்களுடன் கலந்துரையாடும் போட்டோ முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது..
Read More : முதல்வர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? மு.க. அழகிரி மருத்துவமனைக்கு வெளியே சொன்ன தகவல்..