கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. CM ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும்.. அண்ணாமலை காட்டம்..

TN CM MK Stalin BJP State president Annamalai 1

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்..

கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்றிரவு காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த 21 வயதாகும் இந்த மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றி படித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது ஆண் நண்பருடன் அவர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அந்த ஆண்நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை தூக்கி சென்று ரயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கி சென்று 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்..


இதனிடையே மயக்கம் தெளிந்த ஆண் நண்பர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. அங்கு படுகாயமடைந்து கிடந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

பின்னர் தண்டவாளம் அருகே புதருக்குள் ஆடைகள் களைந்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.. தனிப்படை போலீசார் அந்த 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்..

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர்.

பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : 4-வது மாடியில் இருந்து குதித்த 9 வயது பள்ளி சிறுமி.. சிதறிய உடல்கள்.. ரத்தக் கறைகளை அழித்த பள்ளி நிர்வாகம்..!! பகீர் சிசிடிவி காட்சி..!!

RUPA

Next Post

நீரிழிவு நோயாளிகள் தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்..? - பிரபல டாக்டர் விளக்கம்..

Mon Nov 3 , 2025
How long should diabetics walk every day? - A famous doctor explains..
walking

You May Like