கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு கடுமையாக பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருக்கோவில்கள் சார்பில் தற்போது 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மட்டும் 22,455 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், 19 கோவில்களில் மருத்துவமனைகளும் இயங்குகின்றன” என்றார்.
அறநிலையத்துறை வழியாக கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தாண்டி, அறப்பணி சார்ந்த சேவைகள் தொடர்வது தான் திமுக அரசின் நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தினார். “இது புதிய விஷயம் அல்ல. 1,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் காலத்தில் கோவில்களில் கல்வி, மருத்துவ சேவைகள் நடைமுறையில் இருந்தன. கல்வெட்டுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
சட்டப்படி கோவில்கள் சார்பில் கல்வி நிறுவனங்களை தொடங்குவதில் எந்த தவறும் இல்லை. இந்தோளாஜிக்கல் சட்டத்திலேயே இது இடம் பெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார். மேலும் “கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கோவில் நிதியில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்திலும் அதேதான். கோவில்களின் பணம் மக்களின் நலனுக்கே செலவிடப்படுகிறது. அதுவே அறநிலையத் துறை பண்பாடாகவும், பணியாயும் தொடர்கிறது.” என்றார்.
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கோவில் நிதியில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்திலும் அதேதான். கோவில்களின் surplus பணம் மக்களின் நலனுக்கே செலவிடப்படுகிறது. அதுவே அறநிலையத் துறை பண்பாடாகவும், பணியாயும் தொடர்கிறது.
அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், மருதமலை கோயில் சார்பில் பாலிடெக்னிக் தொடங்க கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா போன்ற அதிமுக எம்எல்ஏக்களும் இதே கோரிக்கையை சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளனர். அதனையும் மறந்து பேசுவது துரதிருஷ்டவசமாகும்.
பாஜகவின் ஊதுகுழலாக பழனிசாமி பேசுகிறார். சங்கியின் வாக்குகளை ரீச் செய்ய அவர் இவ்வாறு விஷவாக்களை பரப்புகிறார். வரலாற்றைத் தெரியாமல் கருத்து வைக்கும் இபிஎஸ் வகை தலைமை, அதிமுகயையே ஆபத்தில் தள்ளி வருகிறது. பாஜக என்னும் மலைப்பாம்பு, அதிமுகவை சிறுசிறுவாக விழுங்கிக் கொண்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், 2026க்கு பிறகு அதிமுக கட்சியையே தமிழ்நாட்டில் தேட வேண்டி வரும் என பேசினார்.
Read more: ‘வன தேவதை’ உலகின் மிக வயதான பெண் யானை வத்சலா 109 வயதில் மரணம்..!!