ரயில் தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட கல்லூரி மாணவி..! 

ஆந்திர மாநில பகுதியில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னவரையில் சசிகலா (20) என்பவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் ஒன்றில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவர் என்றும் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் – ராயகடா என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடா பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ​​ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்று தனது கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சசிகலா பலமாக சிக்கிக் கொண்டார். 

மேலும் இவரது கால்கள் தண்டவாளத்தில் அடியில் சிக்கி கொண்டதால் பலத்த காயம் ஏற்பட்டு வெளியே வரமுடியாமல் சிக்கி தவிர்த்துள்ளார். இதனை கண்ட பயணிகள் மற்றும் ரயில்வே மீட்புப் படையினர் கடும் முயற்சி செய்தனர். 

ஆனால் வெளியே எடுக்க முடியாத தவித்த நிலையில், இறுதியில் நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்த பின்னரே, சசிகலாவை வெளியே கொண்டு வந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து உடனடியாக தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் குண்டூர் ராயகடா எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.

Baskar

Next Post

#சென்னை: டிசம்பர் 9, 10 தேதிகளில் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்..மழையின் தாக்கம்..!

Thu Dec 8 , 2022
குளிரும், பணியும் சேர்ந்து இருக்கின்ற நிலையில் மழையும் அதற்கான பங்கினை அளித்து வருகிறது. இந்த சமயத்தில் புயல்களும் உருவாகி வருகிறது.  இந்த மாதமான டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனத்த பலத்த மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மழையானது சென்னையில் நாளைய தினத்தில் இரவு நேரத்தில் மழை பெய்ய தொடங்க இருக்கிறது என்று அறிவித்துள்ளார். மாமல்லபுரம்  […]

You May Like