தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் மரணம்..! 

தமிழ் சினிமா திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்களில் சிவ நாராயண மூர்த்தி என்பவரும் ஒருவர். இவரது எதார்த்த நடிப்பில் தனக்கென தனியிடத்தை பிடுத்து காமெடி நடிகராகவும் வலம் வந்தவர். இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.


விசுவின் பூந்தோட்டம் என்ற  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இதுவரை 218-க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் விவேக் மற்றும் வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து  காமெடியில் தடம் பதித்தவர்.

இவருடைய வயது தற்போது 67. சில காலங்களாக சிவ நாராயணமூர்த்தி தனது சொந்த ஊரிலே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இறுதிச் சடங்கு பட்டுக்கோட்டையில் வைத்து இன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெற இருக்கின்றது. அத்துடன் இவரின் மறைவுக்கு திரைபட பிரபலங்கள் பலரும் மற்றும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

#திருநெல்வேலி:மது போதையில் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனையில் குதித்த நபர்.. வைரலாகும் வீடியோ..!

Thu Dec 8 , 2022
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவினை நேற்று எல்லோரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இதனையொட்டி பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் திடீரென குதித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவ […]
n4494142521670473553467597d3ef9d2baed28669c4464cfe98b32f94f31a297abeca7fe45195b655ac96f

You May Like