காமெடியில் கலக்கிய கஞ்சா கறுப்பு… வாழ்க்கையையே புரட்டி போட்ட கஷ்டகாலம்…!

காமெடியால் மக்கள் மனதில் இடம்பிடித்த கஞ்சா கறுப்பு ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு வாய்ப்பின்றி வீடு வாசலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுள் கஞ்சா கறுப்புவும் ஒருவர். ஒரு காலத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடி நடிகராக புக் ஆனார். விஜய், சூர்யா, விக்ரம், ஜீவா என முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். அடுத்தடுத்த படங்களால் தொடர்ந்து ஏணிப்படியில் வெற்றிகரமாய் ஏறிக்கொண்டிருந்தார். அழகான வீடு, மனைவி, பிள்ளைகள் என மகிழ்ச்சியாய் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் அவர் கடந்த 2013ம் ஆண்டு தான் சம்பாதித்த ஒட்டு மொத்த பணத்தையும் முதலீடு செய்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார். மகேஷ், ஆருஷி, கருப்பு பாண்டி  என நடிகர்கள் நடித்திருந்தனர். கஞ்சா கறுப்புவும் இதில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் பெயர் வேல்முருகன் போர்வெல்ஸ்.  திரைப்படம் வெளியான நிலையில் படம் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக பெரும் இழப்பை சந்தித்தார். தான் வாழ்ந்த பாலா அமீர் என்ற இல்லத்தை விற்றுவிட்டார். பின்னர் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்.

பின்னர் 2015ம் ஆண்டு கங்காரு, மகாராணி கோட்டை போன்ற படங்களில் மீண்டும் நடித்து சீறிப்பாய்ந்தார். தர்மதுரை, குரங்கு பொம்மை, கிடா விருந்து களவாணி போன்ற படங்களை நடித்தார். வெண்ணிலா கபடி குழு 2ல் நடித்தார். அதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்தது. 2022ல் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அவர் பேட்டி அளிக்கையில், ’’ கண்டவன்லாம் சென்னையில் சுத்தும் போது நான் சுத்தக் கூடாதா? நான் நன்றாக உள்ளேன். வாடகை வீட்டில்தான் இருக்கின்றேன். எனினும் நான் மோசமான நிலையில் இல்லை. மலையாளத்தில் 2 படங்களை நடித்து முடித்துள்ளேன்’’ என கூறி உள்ளார்.

Next Post

தொடங்கியது கனமழை!! இந்த மாவட்டத்திற்கு விட்டாச்சு லீவு!

Thu Nov 10 , 2022
தமிழகத்தில் சில இடங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) மழையின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதுமே பரவலாக அடுத்த இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]

You May Like