மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு…! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!

13507948 anbumani 1

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு தரவில்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைஇழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன.

அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியும், நவம்பர் 30-ஆம் தேதியும் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தியிருந்தேன். அக்டோபர் மாதத்தில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக நான் கூறியிருந்த நிலையில், அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேரில் ( 40 ஆயிரம் ஏக்கர்) பயிர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவும், மீதமுள்ள பயிர்களையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் சுமார் 2 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படாதது ஏன்?

உதவி வேளாண் அலுவலருக்கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் பாதிப்பை கணக்கிடுவதற்கு பல நாட்கள் ஆகும்.மேலும் காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா,தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40 ஆயிரம் ஆகும்நிலையில், ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளுக்கு இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

மார்கழி மாதத்தில் ஏன் சுப காரியங்கள் செய்யக் கூடாது தெரியுமா..? மீறி நடந்தால் என்ன ஆகும்..?

Tue Dec 16 , 2025
தமிழர்களின் ஆன்மீக மாதமாக கருதப்படும் மார்கழி மாதம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை நீடிக்கிறது. சூரிய பகவான், குருவாகிய வியாழன் ஆளும் தனுசு ராசியில் தன் பயணத்தைத் தொடங்கும் இந்த மாதமே தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் இந்துக்கள் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதில்லை. சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து, இறைவனின் அருளைப் பெறுவதற்கான வழிபாடுகள், மந்திர ஜபங்கள், […]
marriage

You May Like