வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்து நிலம் வாங்கி உள்ளனர். இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 12-ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த நிலத்தை ஒட்டி நொய்யல் ஆற்றும் உள்ளது.
அண்ணாமலை மற்றும் அகிலா ஆகியோருக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 கோடிக்கும் குறைவாகதான் வருமானம் உள்ள நிலையில், நிலம் வாங்க எப்படி ரூ.4.5 கோடி எப்படி வந்தது என நெட்டிசனகள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக பாஜக பெயரை தவிர்த்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் நிலத்தை பதிவு செய்ய அண்ணாமலை செலுத்திய கட்டணத்தை மட்டும் கூறிய நிலையில், எவ்வளவு தொகை கொடுத்து அண்ணாமலை வாங்கினார் என்பது குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். வங்கி நிர்வாகம் அண்ணாமலைக்கு இவ்வளவு கோடி கடன் கொடுத்தது எப்படி? அதனுடைய உண்மையான பரிவர்த்தனையை சரி பார்க்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.