கன்ஃபார்ம்.. AK 62 படத்தின் இயக்குனர் இவர் தானாம்.. அஜித் போட்ட கண்டிஷன்..

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் இணையதளத்தில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது..

ஏகே 62 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஓடிடி நிறுவனம்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

விக்னேஷ் சிவன் கொடுத்த கதையில் அஜீத் திருப்தி அடையவில்லை என்றும், அதில் மாற்றம் செய்யுமாறும் அஜித் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள தளபதி 67 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதற்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்க மிகப்பெரிய மாஸ் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்.. இதனால், அட்லீ, பிரசாந்த் நீல், விஷ்ணு வர்தன், மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களிடம் அஜித் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..

அட்லீ, பிரசாந்த் நீல், விஷ்ணுவர்தன் ஆகியோர் ஏற்கனவே பிசியாக உள்ளதால், மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து லைகா நிறுவனம் எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.. இந்த படம் துணிவை விட மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக இருக்க வேண்டும் என்று அஜித், மகிழ் திருமேனியிடம் கூறி உள்ளாராம்.. எனவே மகிழ் திருமேனி மீண்டும் கதையில் ஒரு சில மாற்றங்களை செய்து வருகிறாராம்..

மேலும் AK 62 படத்திற்கு இயக்குனர் மாறியுள்ளதால், இசையமைப்பாளர், பிற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைத்திலும் மாற்றம் ஏற்படும்.. அதற்கான பணிகள் முடிந்தவுடன் லைகா அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது.. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே AK 63 படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் இருக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.. பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இடையே நல்ல உறவு உள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணையக்கூடும் என்று கூறப்பட்டது.. ஆனால் அஜீத் போனி கபூருடன் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.. மறுபுறம் விஸ்னுவர்தன் தர்மா புரொடக்ஷன்ஸுடன் பல படங்களில் ஒப்பந்தம் செய்ததால், இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Maha

Next Post

வேலை பார்ப்பதற்காக வந்த 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு….! புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Tue Feb 7 , 2023
முன்பெல்லாம் ஆண்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பதும், பெண்கள் ஆண்களுக்கு பாலியல் தொந்தரவுகளை வழங்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது சில ஆண்களே ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு வழங்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அதாவது 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் ஒருவருக்கு 20 வருட கால சிறை தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.புதுவை மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ் […]

You May Like