தவெக அடைந்த சிறப்பான வெற்றிக்கு வாழ்த்து.. விஜய்யுடன் போனில் பேசிய ராகுல்காந்தி..!

vijay rahul gandhi

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளன.. முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜய்யின் தவெக மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.. தற்போதைய நிலவரப்படி, தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது..


தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..  

தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” திரு. விஜய்யிடம் நான் தொலைபேசியில் பேசி, TVK அடைந்துள்ள சிறப்பான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தத் தேர்தல் தீர்ப்பு, புறக்கணிக்க முடியாததும், ஒருபோதும் புறக்கணிக்கப்படாதுமான இளைஞர்களின் ஓங்கி ஒலிக்கும் குரலைப் பிரதிபலிக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும், அவர்கள் அளித்த ஆதரவிற்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும், அவர்களுக்குச் சேவையாற்றவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் செயல்படும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ” சிறப்பான தேர்தல் செயல்பாடு..” விஜய்யின் தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

RUPA

Next Post

விஜய்க்கு முதலமைச்சர் சிம்மாசனம்.. ஆதரவு தெரிவிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..? பரபர ட்விஸ்ட்!

Mon May 4 , 2026
Vijay on the Chief Minister's throne.. DMK alliance parties express support..? Parapara twist!
vijay 8

You May Like