சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக கொடுத்துள்ளது.. பாஜக வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. எல்லாம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான்.. பாஜக மதவாத சக்தி, அது வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. பாஜக வரக்கூடாது என்றால் காங்கிரஸ் வரலாமா என்று நாங்கள் கேட்போம்.. எதை வைத்து காங்கிரஸை புனிதப்படுத்துகிறார்கள்..?
இந்தியாவை 60 ஆண்டுகள் ஆண்டது காங்கிரஸ் தான்.. நாட்டை நாசமாக்கியது காங்கிரஸ் தான்.. குறிப்பாக என் இனத்தை அழித்தது காங்கிரஸ்.. என் நிலத்தில் நச்சு ஆலைகளை நட்டது யார்..? காங்கிரஸ் கூட இருந்த திமுக எந்த வழியில் காங்கிரஸை புனிதுப்படுத்தும்..?
நீட்டை கொண்டு வந்தது யார்? திமுக அமைச்சர்கள் நிற்கும் இடத்தில் பாஜகவினரை போட்டால் என்ன அர்த்தம்..? வாங்கும் கமிஷனில் திமுக வந்தாலும் மலையை வெட்டுவார்கள்.. அதிமுக வந்தாலும் மலையை வெட்டுவார்கள்.. திமுக ஆட்சியில் அதிமுகவினரின் ஆலைகளில் இருந்து சரக்கு எடுக்கிறது.. அவர்கள் ஆட்சியிலும் இதே தான்.. இது புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லையா..?” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய சீமான் “ இலவசங்கள் வழங்குவது என்பது வீழ்ச்சி திட்டம், கவர்ச்சி திட்டம் இல்லை.. இலவசங்களில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பீர்கள்.. ? ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது.. அதனால் இலவசங்களை நான் தொடர்ந்து எதிர்பேன்..” என்று தெரிவித்தார்..



