இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன் மூலம் அவர்களது படிப்பு, வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளைஞர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக ஆரம்பித்துள்ளார். அந்த மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்துள்ளார். இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்த இளைஞனை சிறுமி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் சிறுமி தற்போது ஐந்து மாத கர்ப்பிணி ஆகி உள்ளார்.
சிறுமி கர்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் குழந்தைகள் நல மையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் வழிகாட்டலின் பேரில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிட தொழிலாளியை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: 20 ஆண்டுகளாக கோமா.. சவுதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்..!!