இருமல் மருந்தால் உயிரிழப்பு விவகாரம்…! முக்கிய ஆவணங்களை எடுத்த அமலாக்கத்துறை…!

ED Raid 2025

இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் நச்சு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. பின்னர், மத்திய பிரதேசம் போலீஸார் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், முறையான அனுமதி இல்லாமல் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் மருந்தை ஏற்றுமதி செய்ய தடையற்ற சான்று வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை, காஞ்சிபுரத்தில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனின் வீட்டுக்கு நேற்று காலை 2 வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல், மருந்து நிறுவனத்துக்கு தடையில்லா சான்று வழங்கியதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் திருவான்மியூர் பாலகிருஷ்ணா சாலையில் உள்ள தீபா ஜோசப், அண்ணாநகரில் உள்ள கார்த்திகேயன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் மருந்து உற்பத்தி ஆலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், குரோம்பேட்டை பார்வதிநகரில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

Vignesh

Next Post

சிறப்பு டெட் தேர்வு... மாவட்டந்தோறும் இணைய வழியில் சிறப்பு பயிற்சி வகுப்பு..! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Tue Oct 14 , 2025
அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்கள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனர். பதவி […]
TET 2025

You May Like