VIRAL | ‘பறக்கும் விமானத்தில் காதல் ஜோடி சில்மிஷம்’… அதிர்ச்சியில் உடைந்த சக பயணிகள்.!!

4 மணி நேர விமான பயணத்தின் போது விமானத்தில் பயணித்த காதல் ஜோடி செய்த செயல் சக பயணிகளை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் X வலைதளத்தில் செய்த பதிவு 21 மில்லியன் சமூக வலைதள வாசிகளால் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது.

விமான பயணத்தின் போது ஒரு ஜோடி தங்களது இருக்கைகளில் வெறும் கால்களுடன் ஒருவர் மீது ஒருவர் படுத்துக்கொண்டு கட்டிப்பிடித்தவாறு பயணம் செய்துள்ளனர். மேலும் தங்களது இரு கைகளையும் இணைத்து இதயக் குறியீட்டையும் காட்டி இருக்கின்றனர். இதனை புகைப்படம் எடுத்த சக பயணி தனது X சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்துள்ள அவர் ” 4 மணி நேர விமான பயணத்தின் போது நான் கண்ட காட்சிகளை நம்ப முடியவில்லை. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கையில் படுத்து கொண்டு காதல் செய்து வந்தனர். விமானத்தின் பயணம் செய்த 4 மணி நேரமும் அந்த ஜோடி இவ்வாறுதான் பயணம் செய்தது” என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது இந்தப் பதிவு 21 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக தங்களது கருத்துக்களையும் இணையதள வாசிகள் பகிர்ந்துள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ள ஒரு நபர் விமானப் பணியாளர்கள் இது போன்ற நடவடிக்கைகளை எவ்வாறு அனுமதித்தனர் என கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: ’உனக்கு என் பொண்ணு கேட்குதா’..? நடுரோட்டில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!! தந்தை, அண்ணன் வெறிச்செயல்..!!

Next Post

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் விற்கப்படும் 70 சதவீத புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் தவறாக பெயரிடப்பட்டுள்ளன..!

Fri Apr 12 , 2024
இந்தியாவில் விற்கப்படும் புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் பெரும்பாலானவை தவறான தகவல்களை தறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன protien powder: சுறுசுறுப்பாக இருக்கவும், தசை வெகுஜனத்தை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்று புரத பொடிகள். இதனை பெரியவர்கள், சிறியவர்கள் விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் எடுத்துக்கொள்கின்றனர். இந்தியாவில் விற்கப்படும் மற்றும் உட்கொள்ளப்படும் புரதப் பொடிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆய்வின் முடிவில் […]

You May Like