ரேஷன் பொருள் விநியோகம்.. தமிழக அரசுக்கு 8 வாரம் கெடு..!! நீதிமன்றம் உத்தரவு.!

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களான அரிசி பருப்பு சீனி கோதுமை சமையல் எண்ணெய் மண்ணெண்ணெய் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கலப்படம் போன்றவற்றை தடுப்பதற்கு மாநில அரசுகளும் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி அரசு அதிகாரிகள் நியாயவிலை கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கேசரி பருப்பும் மசூர் பருப்பை போன்றே தோற்றமளிப்பதால் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மசூர் பொறுப்பை ரேஷன் கடைகளில் விநியோகிப்பதை தமிழக அரசு தடை செய்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் தடை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மசூர் பருப்பை விரைவில் அடையாளம் கண்டு ரேஷன் கடைகளில் விநியோகிக்குமாறு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வசூர் பருப்பு விநியோகிப்பதற்கு 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது .

Next Post

CBSE தேர்வு 2024: "தேர்வு தேதிகளில் மாற்றம் குறித்த போலியான நோட்டீஸ்". தேர்வு வாரியம் எச்சரிக்கை.!

Fri Feb 16 , 2024
சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் குறித்து பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான தகவல்களுக்கு எதிரான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ வெளியிட்டு இருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு எதிராக சிபிஎஸ்சி தனது ‘X’ வலைதள பக்கத்தில் சுற்றறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளது. […]

You May Like