மகளிடம் தொடர் பாலியல் வல்லுறவு! கணவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !

தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது ஹைதராபாத் நீதிமன்றம். ஹைதராபாத்தைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த 15 வயது பெண் குழந்தையை தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருக்கிறார்.


இது தொடர்பாக அந்த குழந்தை தனது தாயிடம் நடந்ததைச் சொல்லி இருக்கிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து அந்த நபரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. இந்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்திருக்கிறது நம்ப பள்ளி நீதிமன்றம். அந்தத் தீர்ப்பின்படி தனது மனைவியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுக்காவல் தண்டனையும் 1000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது .

1newsnationuser5

Next Post

ஆவிகளுடன் பேசும் ஓய்ஜா போர்ட்! பாதிக்கப்பட்ட 28 மாணவிகள்! திக் திக் சம்பவம்!

Fri Mar 10 , 2023
கொலம்பியா நாட்டில் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் ஓய்ஜா பலகையை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல் பாதைகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் க்ளெரஸ் நகரில் அமைந்துள்ள க்ளெரஸ் எஜுகேஷன் இன்ஸ்டிட்யூட் என்னும் பள்ளியில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவிகள் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் […]
IMG 20230310 WA0134

You May Like