உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வர உள்ளார்.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கிளப் போட்டிகளில் அல் நாசர் (சவுதி அரேபியா ) அணிக்காக விளையாடி வருகிறார் .இந்த நிலையில் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் (AFC Champions League) போட்டியில் விளையாடுவதற்காக ரொனால்டோ இந்தியா வருகிறார். குரூப் டி பிரிவில் அல் நாசர், எப்சி கோவா (இந்தியா), பெர்சபோலிஸ் (ஈரான்) மற்றும் அல்-துஹைல் (கத்தார்) அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அல் நாசர் கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் ரொனால்ட்கோ இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டி எப்போது மற்றும் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ரொனால்டோ தலைமையிலான அல்-நாஸர் அணி, சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அணி. இந்த அணி உலகப் புகழ்பெற்ற பல வீரர்களைக் கொண்டுள்ளது.
எனவே, அல்-நாஸர் மற்றும் எஃப்சி கோவா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ரொனால்டோவின் வருகை, இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் மீது இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கக்கூடும். இது இந்திய கால்பந்துக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்தச் செய்தி இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.