குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் ஆடிய குஜராத் அணி அசத்தலாக விளையாடி 214 ரன்களை குவித்துள்ளனர். இதனால் சென்னை அணிக்கு இலக்கு சற்று சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Next Post
CSK vs GT - ஐபிஎல் இறுதிப்போட்டி! மழையால் ஆட்டம் பாதிப்பு!!
Mon May 29 , 2023
இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றுவருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன்களை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]
