பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலம்…! வரும் 28-ம் தேதிக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும்…!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மொத்தம்‌ ரூபாய்‌ 4000 கோடி மதிப்பில்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 10 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 30 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியால்‌, மும்பையில்‌ உள்ள அதன்‌ மும்பை கோட்டை அலுவலகத்தில்‌ மார்ச்‌ 25, 2023 அன்று நடத்தப்படும்‌. போட்டி ஏலக்‌ கேட்புகள்‌ முற்பகல்‌ 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும்‌ போட்டியற்ற ஏலக்‌ கேட்புகள்‌ முற்பகல்‌ 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும்‌ இந்திய ரிசர்வ்‌வங்கியின்‌ ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்‌ மின்னணு படிவத்தில்‌ மார்ச்‌ 28, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

Vignesh

Next Post

இமயமலையில் எந்தநேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்!... எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி!...

Fri Mar 24 , 2023
எந்த நேரத்திலும் இமயமலைப் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் மட்டும் ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை மாலை வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், […]

You May Like