லக்னோவில் ஒரு நபர் ஏடிஎம் (ATM) இயந்திரத்தின் பணத் தட்டில் (cash tray) இரும்பு துண்டை நுழைத்து, பணத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் பத்ஷாநகர் (Badshahnagar) பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) ஏடிஎம் மையத்தில் நடைபெற்றது.
சம்பவம் எப்படி நடந்தது?
பத்ஷாநகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், ஒரு நபர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் சட்டவிரோதமாக பணத்தை திருட திட்டமிட்டார். அதன்படி நேற்று காலை, அவர் ஏடிஎம் இயந்திரத்தின் பணத் தட்டில் ஒரு மெல்லிய இரும்புக் குச்சியை நுழைத்து, வாடிக்கையாளர்களுக்காக வெளிவரும் பணத்தை தடுத்து வைத்தார். ஏடிஎம் நிறுவனத்தின் கண்காணிப்பு குழு அந்தச் செயலை சிசிடிவி கேமரா மூலம் நேரலையில் கண்டு, உடனடியாக மஹாநகர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தது..
போலீஸ் விரைவான நடவடிக்கை
தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் அகிலேஷ் மிஸ்ரா மற்றும் அக்பர் நகர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அனுராக் சிங் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் பாபா கா புர்வா (Baba Ka Purwa), பிரதாப்கர் (Pratapgarh) பகுதியைச் சேர்ந்த அனந்த் பிரகாஷ் மிஸ்ரா (Anant Prakash Mishra) என்று அடையாளம் காணப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹிடாச்சி நிறுவனத்தின் பிரதிநிதி ஜிதேந்திர குமார் திவாரி (Jitendra Kumar Tiwari) அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், நிறுவனத்தின் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கியிருந்த பணத்தை மீட்டனர்.
அவ பணத்தை எவ்வாறு திருடினார்?
குற்றவாளி ஒரு மெல்லிய இரும்பு துண்டை ஏடிஎம் இயந்திரத்தின் பணத் தட்டில் நுழைத்தார். வாடிக்கையாளர்கள் பணம் வரவில்லை என்று நினைத்து இடத்தை விட்டு சென்றபின், அவர் திரும்பி வந்து அந்த இரும்புக் குச்சியை எடுத்து, அதில் சிக்கியிருந்த பணத்தாள்களை எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம், ஏடிஎம் பயன்பாட்டின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
Read More : உங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா? 1 நிமிடத்திலேயே சரிபார்க்கலாம்.. எப்படி தெரியுமா?



