Alert: 13, 14-ம் தேதிகளில் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

cyclone rain

தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஓருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 13, 14 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நடிகர் அபினய் மரணம் எதிரொலி!. கல்லீரல் நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?. இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!.

Wed Nov 12 , 2025
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அபினய் கிங்கர் கல்லீரல் நோயால் காலமானார். அவருக்கு வயது 44 தான், பல மாதங்களாக இந்த நோயால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல் நோயைத் தடுக்க உங்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். பிரபல கல்லீரல் மருத்துவர் எஸ்.கே. சரின், கல்லீரல் நோயைத் தடுக்க பல எளிய வழிகளையும் பரிந்துரைத்துள்ளார், அவற்றை நீங்கள் ஆரோக்கியமான கல்லீரலைப் […]
Fatty Liver 2025 05 5e3332a6381853a47963d69e194ef507 16x9 1

You May Like