கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (50). கச்சி அருகே உள்ள குன்னத்துநாடு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். வியாபாரியான இவரது மகளின் திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற இருந்தது. அதற்காக 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் சேர்த்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சுரேந்திரன் திடீரென காணாமல் போய்விட்டார். வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணமும் காணாமல் போனது. மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து எர்ணாகுளம் புறநகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், அவரது செல்போன் பல நாட்கள் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது.
பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேந்திரன் மகளுடன் தொடர்பு கொண்டு, “நான் நலமாக இருக்கிறேன், என்னை தேட வேண்டாம்” என்று கூறினார். மகள் அழுதபடியே திருமணத்திற்கு வருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் நான் வருவதாக தெரிவித்துள்ளார். சுரேந்தரின் செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார், சுரேந்திரனின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள தனியார் விடுதி-வில் அவர் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த பெண் அவரது கள்ளக்காதலி என உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சுரேந்திரனை கைது செய்து, 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ரொக்கம் மீட்டனர். கள்ளக்காதலியை எச்சரித்த போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,



