3 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சென்னை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2025-2026 கல்வியாண்டுக்கான 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 12.05.2025 முதல் தொடங்கியது. விருப்பமுள்ள மாணவர்கள் B.A LLB.(Hons), B.B LLB.(HONS), B.COM .LLB .(HONS), மற்றும் BCA,LLB (HONS) படிப்புகளில் சேர்வதற்காக “School of Excellence in Law”, சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் பதிவு பதிவு செய்ய கால அவகாசம் முடிவடைய உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடையும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வித்தகுதி, நுழைவுத் தேர்வு விவரங்கள், கட்டண கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in இல் அறிந்து, சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 3 ஆண்டு மற்றும் 2 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தனி அறிவிப்பு பின்னர் வெளியாகும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044-24641919 / 24957414 என்ற தொலைபேசி எண்களில் அல்லது thechairmanlawadmissions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Read more: யாருகிட்ட.. அடி மடியிலேயே கை வைத்த ஈரான்.. பதறும் உலக நாடுகள்.. இந்தியாவுக்கும் ஆபத்து..