பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்ய 2026 ஜனவரி வரை கால அவகாசம்…!

farmers 2025

ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.


ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் M/s.சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (Kshema General Insurance Limited) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரபி பருவத்தில் தட்டைப்பயறுக்கு 30.11.2025. சோளம் 16.12.2025 நிலக்கடலைக்கு 30.12.2025, நெல்-III 31.1.2026 எனவும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு பிரிமீயத் தொகையாக ஒரு ஏக்கர் நெல்-|| க்கு ரூ.568/-, மக்காசோளம்-|| ரூ.482/-, பருத்தி-|| ரூ.680/-, நிலக்கடலைக்கு ரூ.326/-, சோளம் ரூ.150/-. தட்டைப்பயறு ரூ.252/- நெல்-III ரூ.568/-செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காவில் உள்ள விவசாயிகள், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவுப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மியான்மர் மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்கள் மீட்பு!. தனி விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினர்!.

Sat Nov 22 , 2025
மியான்மரில் வேலை நிமித்தமாக சென்று மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்கள் மீட்கப்பட்டு தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். மியான்மரில் உள்ள மியாவாடி நகரில், அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு காத்திருப்பதாக, ‘வாட்ஸாப், டெலிகிராம்’ போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வாயிலாக தகவல் பரவின. இதை நம்பி, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் அப்பணிக்கு சென்றனர். அங்கு அவர்களை ஏமாற்றி பாஸ்போர்ட், பணம், ‘மொபைல் […]
370 Indians rescued from Myanmar

You May Like