இந்த வழக்கிற்கே மரண தண்டனையா..? குற்றவாளி மீதான குற்றம் என்ன..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

வியாட்நாம் நீதிமன்றம் பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ரோங் மி லானுக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் முன்னணி நிறுவனமான ‘வான் தின் பாட்’ தலைவர் 67 வயதான ட்ரோங் மி லான், அபகரிப்பு, ஊழல் மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மரண தண்டனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுக 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.

வியட்நாமின் முன்னணி வணிக வங்கியான எஸ்சிபி வங்கியைச் சட்டத்திற்கு விரோதமாக 2012 – 2022 வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கியதாகவும் 86 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்ததாகவும் இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. கம்யூனிச நாடான வியட்நாமில் 2016 முதல் ஊழலுக்கு எதிராக நடைபெற்று வரும் நடவடிக்கைகளில் லான் தொடர்புடைய வழக்கு மிகப்பெரிய பண மோசடியாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த நாட்டின் நிகர வருவாயான ஜிடிபியின் 3 சதவிகிதத்துக்கு நிகரான ஊழல் நடந்துள்ளது. லான் உடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட 84 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை நீதிமன்றம் விதித்துள்ளது. லானின் கணவர் ஹாங்காங் முதலீட்டாளர் எரிக் சு நப்-கீ குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். எஸ்சிபி வங்கியில் இருந்து போலியான நிறுவனங்களை அமைக்க உதவியுள்ளார். லானின் மருமகன் ட்ரோங் ஹுயு வானும் இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுபோன்ற பண மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது மிக அபூர்வமானது.

Read More : இளம் வயதிலேயே தரமான சம்பவம்..!! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்..!!

Chella

Next Post

கோடை வெயில் ஆரம்பிச்சாச்சு!! சுகாதார அமைச்சகம் வழங்கிய உணவு ஆலோசனைகள்..! என்ன தெரியுமா?

Thu Apr 11 , 2024
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போதைய வெப்ப அலை காலத்தை எதிர்த்துப் போராட இந்திய சுகாதார அமைச்சகம் உணவு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் மையம் ஏப்ரல் முதல் ஜூன் வரை பல மாநிலங்களில் வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கோடை வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை சரிசெய்தல் மிகவும் முக்கியமானது. இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள […]

You May Like