சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த் தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்..!

dhasvanth

சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை ஹாசினி விளையாடி விட்டு அபார்ட்மெண்ட்டுக்குள் வருவது பதிவாகி இருந்தது. ஆனால், உள்ளே வந்தவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் தஷ்வந்த் என்ற இளைஞர் இரவு 9 மணியளவில் கையில் ஒரு பையுடன் வெளியே சென்றுவிட்டு, அரை மணி நேரத்தில் திரும்பியது தெரிய வந்தது.

இதையடுத்து தொடர்ந்து தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். அவரை கைது போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து தீர்ப்பு அளித்தார். தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து, தஸ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தஸ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் தஷ்வந்தை விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more: ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பயண தேதிகளை மாற்றலாம்!

English Summary

Death sentence of Dashwant cancelled.. Supreme Court quashed the Madras High Court order..!!

Next Post

இந்த காரின் விலை ரூ. 87,700 குறைப்பு.. 33 கிமீ மைலேஜ் தரும்.. அதுவும் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு உள்ளது!

Wed Oct 8 , 2025
இந்தியாவில் மாருதி சுசுகி டிசையர் 2025 மாடல் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. சமீபத்தில், மாருதி சுசுகி தனது பிரபலமான செடான் காரான டிசையரின் விலையை ரூ.87,700 வரை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களில் திருத்தங்கள் காரணமாக இது சாத்தியமானது, இதன் விளைவாக அடிப்படை மாடல் எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.6.26 லட்ச எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்தக் குறைப்பு காரணமாக, நடுத்தர குடும்பங்களுக்கு டிசையர் எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது. டாப் மாடல் ZXI […]
car

You May Like