ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்த 386 அவதூறு வீடியோக்களை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ட்விட்டர், ஃபேஸ்பும், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும், அதேபோல் 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
61 கடன் செயலிகளை நீக்க எடுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டில் மட்டும் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் 40 சட்டவிரோத பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.