இந்திய ராணுவத்தில் வேலை…! மொத்தம் 400-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…!

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Material Assistant பணிக்கு மொத்தமாக 418 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.29,200 முதல் அதிகபட்சம் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் 11.11.2022 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி பயன்படுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/17A9zZyvxbzdZW0hDj0CXB56MO6A9WFw9/view

Vignesh

Next Post

டி20 உலகக்கோப்பை..!! பரபரப்பான கடைசி ஓவர்..!! சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி..!!

Mon Oct 24 , 2022
டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.   டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால், வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தது […]

You May Like