பரபரப்பு..! டெல்லி வெடி விபத்து… தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…!

Delhi blast 2025

டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல்களை கையாளும் சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்ட பிரிவு 16 தீவிரவாத தடுப்பு பிரிவாக உள்ளது. தீவிரவாத செயல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தால் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

தற்போது டெல்லி வெடி விபத்து தொடர்பாக சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சட்டப்பிரிவு 18 படி தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி போருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாகும். தீவிரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டுதல் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை இந்த சட்டப்பிரிவு தடை செய்கின்றது. இந்த சட்டப் பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் விரிக்கப்படலாம்.

Vignesh

Next Post

உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் ‘குல்கந்து’..!! யாரெல்லாம் கட்டாயம் சாப்பிடக் கூடாது..? முக்கிய எச்சரிக்கைகள்..!!

Tue Nov 11 , 2025
இனிப்பான மற்றும் குளிர்ச்சியான சுவையுடன் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்ட குல்கந்து, நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இது, பொதுவாக வயிற்று எரிச்சலை தணிப்பது, வாய்ப்புண்களை குணப்படுத்துவது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பலன்களைத் தரக்கூடியது. அத்துடன், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், குல்கந்தை அனைவரும் சாப்பிட முடியாது. குறிப்பிட்ட உடல்நலப் […]
Gulkand 2025

You May Like