டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹாங்காங்கில் அவசரமாக தரைறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கே சென்றது.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தால் இயக்கப்படும் AI315 விமானம், திட்டமிட்டபடி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது, ஆனால் விமானி ஒரு கணினி செயலிழப்பைக் கண்டறிந்ததால் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது என்று சம்பவத்தை நன்கு அறிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் ஹாங்காங்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுக்கள் தற்போது விமானத்தை ஆய்வு செய்து வருகின்றன.
ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் அருகே மற்றொரு ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானமான AI171 விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : அடுத்த பரபரப்பு.. லக்னோ வந்த ஹஜ் பயணிகள் விமான சக்கரத்தில் புகை வெளியேறியதால் பதற்றம்..