டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி… நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு…!

blast 2025

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக சென்று நலம் விசாரித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்..

இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம்,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் போன்ற இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பீரை தொடவே கூடாது..!! மீறினால் உயிருக்கே ஆபத்து..? நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Tue Nov 11 , 2025
உலகில் மிகவும் பிரபலமான மதுபானங்களில் ஒன்றாக பீர் இருந்தாலும், சிலர் புத்துணர்ச்சிக்காக இதனை அருந்தினாலும், அதை அடிக்கடி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளை கொண்டவர்கள் பீர் அருந்துவதை தவிர்ப்பதன் மூலம், தீவிரமான பக்கவிளைவுகளை தவிர்க்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். யார் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். செலியாக் நோய் : செலியாக் […]
Beer 2025

You May Like