கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மனு… அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி போட்ட உத்தரவு…!

udhaynidhi magalir 2025

பொதுமக்கள் வழங்கும் மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறைவாரியாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையினுடைய முன்னெடுப்பான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalaignar Sports kids) உங்களுடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்த்துவிட்டீர்கள் என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி. அவை ஊராட்சியில் உள்ள இளைஞர்களுக்கு, மாணவ, மாணவிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறதா, அதற்கான Register பராமரிக்கப்படுகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலில் இந்த விளையாட்டு உபரகணங்களை பயன்படுத்தி விளையாட பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கம் (Mini Stadium) பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மக்களுடைய கோரிக்கை மனுக்களுக்கு கூடுமானவரை தீர்வு பெற்றுத் தரவேண்டும். தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு அந்த மனு அளித்தவருக்கு உரிய காரணத்தை எளிமையாக புரியும்படி விளக்கி கூற வேண்டும். இந்த அரசின் மீதும் முதலமைச்சர் அவர்களின் மீதும் நம்பிக்கை வைத்து தான் மக்கள் மனுக்களை அளிக்கிறார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு மனுக்களை அணுக வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

உங்களுடன் முதலமைச்சர் முகாம்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வரும் 15-ம் தேதி துவங்க இருக்கின்றார்கள். அந்த முகாம்களில் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மனுக்கள் அதிக அளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும். சாலைகள், குடிநீர், மின் இணைப்பு போன்ற அடிப்படை தேவைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார் மனுக்களை தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Read More: Happy Birthday MS Dhoni| கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள்!.

Vignesh

Next Post

முக்கிய அறிவிப்பு: 19 இடத்தில் நாளை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்...!

Fri Jul 11 , 2025
ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் […]
Ration Card 2025

You May Like