தனுஷால் மாமனார் ரஜினிகாந்த் உச்சகட்ட சந்தோஷம் !!!

அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் தனுஷ் நடிக்கின்றார். தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்பம் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது.

திரைப்படங்களில் என்னதான் பலமடங்கு வளர்ச்சியைக் கண்டாலும் குடும்ப வாழ்க்கையில் வீழ்ச்சியைத்தான் சந்தித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய இருப்பதாக அவர்களே பதிவிட்டனர். பின்னர் ஒரு நல்ல முடிவு எடுத்து தற்போது இருவரும் அந்த முடிவை கைவிட்டதாக கூறினார்.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தற்போது ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். ஏற்கனவே செளந்தர்யா ரஜினிகாந்த் வாழ்க்கையிலும் ஒரு புயல் வீசி பின்னர் அவர் வாழ்க்கையை சரி செய்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் மற்றொரு மகளின் வாழ்விலும் இப்படி ஒரு நிகழ்வு வந்தது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் தனுஷ் மீண்டும் குடும்பத்தில் இணைந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. ரஜினிக்கு இரு மடங்கு சந்தோஷம் என்பதை அவர் புன்னகையாலே கூறிவிட்டார்.

இந்நிலையில் தனுஷ் மாமனார் வீட்டுக்கு அருகிலேயே தனது கனவு இல்லத்தை கட்டி வருகின்றார் . அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கிரகப்பிரவேசம் நடத்தவும் திட்டமிட்டு அங்கு தன் மனைவி மற்றும் மகன்களுடன் குடியேற உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடக்கின்றது.

எனவே விவாகரத்து முடிவை விட்டுவிட்டு இருவரும் அடுத்த கட்டமாக சிந்தித்து சொந்த வாழ்வில் முன்னேறுவது ரஜினிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எனவே புது வாழ்க்கை வாழப்போகும். தன் மகள் மருமகனை நினைத்து சந்தோசத்தில் உள்ளாராம். எனவே அவர்களுக்கு ஒரு ஆச்சர்யப்படுத்தும் வகையில் சர்ப்ரைஸ் கிப்டு கொடுக்க உள்ளாராம்.

அதாவது ரஜினியுடன் இணைந்து ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தனுஷின் நீண் நாள் ஆசையாக உள்ளது. அதற்காக பல முறை முயற்சி செய்தும் தனுஷின் இந்த கனவு மட்டும் நிறைவேறாமல் உள்ளதாக அவர் தெரிவித்திரு்கினறார். அதை நிறைவேற்ற மாமனார் முடிவு செய்துவிட்டார். எனவே நெல்சனின் இயக்கத்தில் ஜெயலர் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை தன் வசம் வைத்திருக்கின்றார்.

அந்த வகையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு திரைப்படம் கையில் உள்ளது. அந்த படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சக்ரவர்த்தி இயக்க உள்ளார். எனவே அதில் தனுசுக்கு ஒரு ரோல் உள்ளது. இது பற்றி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதான் அந்த சர்ப்ரைஸ்ஸ்ஸ்…….

Next Post

ரவீந்தரை மிரட்டிய மகாலட்சுமி !! பொண்டாட்டி பேச்ச கேட்டு பொட்டிப்பாம்பா அடங்கிட்டாரு !!

Mon Oct 17 , 2022
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக வளம்வந்து கொண்டிருப்பவர் நடிகை மகாலட்சுமி – ரவீந்தர் தம்பதி திருமணமான சில வாரங்களிலேயே எப்படிஎல்லாம் மிரட்டி வச்சுருக்காருன்னு பாருங்க! நடிகை மகாலட்சுமி ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சற்று சலசலப்பான விமர்சனங்களை ஆரம்பத்தில் கொடுத்தாலும் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை பல நிகழ்வுகளில் கூறியுள்ளனர். அனைவரின் விமர்சனங்களுக்கும் பொறுமையாக பதில் அளித்து திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் […]

You May Like