” எனக்கு நீண்ட நாட்களாக இந்த அரிய நோய் இருக்கு..” உண்மையை உடைத்த நடிகை அனுஷ்கா..

சமீப காலமாக முன்னணி நடிகைகள் தங்களின் உடல்நலம் குறித்து ரசிகர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய் குறித்து பகிர்ந்து கொண்டார்.. அதே போல் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு ஏற்பட்ட பி.சி.ஓ.எஸ். பிரச்சினை குறித்து பகிர்ந்து கொண்டார்.. இந்தப் பட்டியலில் தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.. ஒரு அரிய மற்றும் சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

anushka

இதுகுறித்து பேசிய அவர் “ எனக்கு சிரிப்பு நோய் உள்ளது. சிரிப்பது ஒரு பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன். நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போதோ அல்லது படமெடுக்கும்போதோ, நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்.. சில சமயம் தரையில் விழுந்து சிரித்துள்ளேன்.. இதனால் படப்பிடிப்பும் பலமுறை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எனது சிரிப்பு நேரத்தை, படக்குழுவினர் ஓய்வு நேரமாக எடுத்து, அப்போது சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்தவும் பயன்படுத்துவார்கள்.. அதற்காக சகநடிகர்கள், படக்குழுவினர் எனக்கு நன்றி தெரிவிப்பார்கள்..” என்று கூறினார்..

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானார்.. 2020-ம் ஆண்டு வெளியான நிசப்தம் படத்தில் அவர் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தார்.. அந்த படத்தில் நடிகை அனுஷ்காவின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா, நவீன் பாலிஷெட்டி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maha

Next Post

சென்னை ஆவடி அருகே பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை……! காரணம் என்ன…..?

Sat Feb 18 , 2023
சென்னை ஆவடியை அடுத்துள்ள கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகள் வினோதினி (22). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி வினோதினி நேற்றைய தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற இரும்பு கேட்டில் தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி […]

You May Like