திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் தார்பாய் முருகன் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட இருவரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவருக்குள் ஏற்பட்ட மோதலால் கடந்த 1998 ஆம் வருடம் திருமங்கலம் அருகே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல் ஆர் வி நகரை சேர்ந்த பாலன் என்பவரின் மகன் ரமேஷ்குமார் (47) என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது செக்கானூரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அவரை பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் அவரை காவல்துறையினரால் பிடிக்க இயலவில்லை.
இந்த நிலையில் தான் ரமேஷ்குமார் திண்டுக்கல் பகுதியில் மாறுவேடத்தில் சுற்றி திரிவது செக்கானூரணி காவல்துறையினருக்கு சமீபத்தில் தெரியவந்தது. ஆகவே காவல்துறையினர் திண்டுக்கல் பகுதியில் அவரை கண்காணித்து வந்தபோது, மலைக்கோட்டை அருகே அவர் பிச்சைக்கார வேடத்தில் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் காவல்துறையினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையினரின் பிடி சிக்காமல் இருப்பதற்காக பிச்சைக்கார வேடத்தில் சுற்றி செய்வது தெரிய வந்தது. வலை வழக்கில் 22 வருடங்களுக்குப் பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது