இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற சலுகை… யாரெல்லாம் இதில் பயன்பெறலாம்…?

esi 2025

தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் உள்ளனர்.

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். ஊதிய உச்சவரம்பு (உயர் சம்பள வரம்பு) திருத்தம் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. இஎஸ்ஐ சட்டம், 1948-ன் கீழ் காப்பீட்டுக்கான ஊதிய உச்சவரம்பில் கடைசி திருத்தம் 01.01.2017 அன்று செய்யப்பட்டது, இதில் ஊதிய வரம்பு மாதத்திற்கு ரூ.15,000/- இலிருந்து ரூ.21,000/- ஆக உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் இஎஸ்ஐ சார்பில் 3 மருத்துவமனைகளும், மாநில அரசு சார்பில் 8 இஎஸ்ஐ மருத்துவமனைகளும் செயல்படுகின்றன என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

புகைப்பிடிப்பதால் பற்களில் பிடித்திருக்கும் கறைகளை எவ்வாறு அகற்றுவது?. எளிய டிப்ஸ் இதோ!

Tue Jul 29 , 2025
புகைப்பிடிப்பவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் நோய்கள் முதல் இதய நோய்கள் வரை, மோசமான சூழ்நிலைகளில் புற்றுநோய் வரை, இவை புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளாகும். இதுதவிர, புகைபிடிப்பதால் ஒரு குறிப்பிடத்தக்க விளைவும் உள்ளது, அது என்னவென்றால் பற்களில் ஏற்படும் கறை. புகைபிடிக்கும் கறைகளுக்கான காரணங்கள்: ஒரு சிகரெட்டில் இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன: தார் மற்றும் நிக்கோடின். இந்த இரண்டும் […]
TeethRemove Smoking Stains 11zon

You May Like