ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்வதற்கு முன்பே கிட்டத்தட்ட பத்துமுறை அவரை கொல்ல படையெடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கிரீஷ்மா குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் தங்களின் காதல் வெளியில் தெரிந்துவிட்டாலோ, ஷரோன் தனது திருமணத்தில் பிரச்சனை செய்துவிடுவாரோ என பயந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். முன்னதாக என் குடும்பத்தினர் ஜாதகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் ஜாதகப்படி என் முதல் கணவர் உயிரிழந்துவிடுவார். எனவே நாம் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதற்கு ஷரோன் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் இருவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் காதல் விவகாரத்தை போலீசிடம் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கிரீஷ்மாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ஒப்புக் கொண்டார். தற்போது மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே 10 முறை அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் தற்போது 11வது முறையாக ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.