திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை.
திருப்பூர் மாவட்டம் திபொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தந்தை தேய்வசிகாமணி. தாய் அமலாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 சவரன் நகை திருட்டு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவையில் பணியாற்றும் செந்தில்குமார் தாய், தந்தையை பார்க்க வந்திருந்த பொது இந்த கொலை நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலை நடந்துள்ளதா இல்ல வேறு எதாவது காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.