fbpx

ரயில்வேயில் 35000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 35,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ல் கொரோனாவுக்கு முன்பு காலிப்பணியிங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தற்போது இதற்கான காலிப்பணியிடங்கள் தற்போது படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது. மேலும் 2023ம் ஆண்டுக்குள் எஞ்சி உள்ள 35,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நிர்வாக இயக்குனர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ’’ ஒரே நேரத்தில் அனைத்து நிலைகளிலான தேர்வு முடிவுகளை வெளியிடாதது குறித்த கேள்விக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகு பெறுகின்றனர். இதனால், தகுதியுடைய பலர் விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். எனவே அனைத்து நிலைகளின் தேர்வுகளின் முடிகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை.

’’ரயில்வேயின் அனைத்து நிலைகளின் தேர்வு முடிவுகளை தனித்தனியாக பெற ரயிலவே தயாராகி வருகின்றது. இதனால், அதிக ரயில்வே ஆர்வலர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்’’ என தெரிவித்தார். கொரோனா தொற்று இருந்தபோது ரயில்வே தேர்வு மற்றும் முடிவுகளுக்கு தயாராகி, குறுகிய காலத்தில் விரைந்து செயல்பட்டு முடிக்கப்பட்டு வருகின்றது. ’’மார்ச் 2023க்குள், ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு செயல்முறை நிறைவடையும்’’ என ஷர்மா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 10லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் அறிவித்துள்ள நிலையில் இதற்கான பணிகள் சூடுபிடித்துள்ளது.

Next Post

ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் கடத்தல்!! இதற்கு இவ்வளவு கோடி மதிப்பா?

Fri Nov 18 , 2022
திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை மடக்கி பிடித்து கேள்வி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் […]

You May Like