ICMR நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், அந்த நிறுவனத்தின் காலியாக இருக்கின்ற project senior research fellow, project junior research fellow போன்ற பணிகளுக்கு, 7 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த வயது வரம்பு குறித்த தளர்வுகள் தொடர்பாக, அறிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், MSc, post graduate degree பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 35000 ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் walk in interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற அதிகாரப்பூர்வமான முகவரிக்கு, வரும் 20.9.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.