fbpx

பள்ளி மாணவியை மிரட்டி 2 ஆண்டுகளாக பலாத்காரம்..! திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் பெற்றோர் அதிர்ச்சி..!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து 6 மாதம் கர்ப்பமாக்கிய நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழபாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவியை மிரட்டி 2 ஆண்டுகளாக பலாத்காரம்..! திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் பெற்றோர் அதிர்ச்சி..!

இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, மகேந்திரன் 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Chella

Next Post

வரலாறு காணாத உச்சம்.. திருப்பதி கோயிலில் ஒரே நாளில் இத்தனை கோடி காணிக்கையா..?

Tue Jul 5 , 2022
திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.. ஆந்திர மாநிலத்தின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோயில் எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. கோயில் பராமரிப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த சூழலில் கோடை விடுமுறை முடிவடைந்திருந்தாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் […]

You May Like