தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை..! நடந்தது என்ன?

அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை தொழிற்சாலைக்குள் திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்தார். அப்போது அவர் தொழிற்சாலையின் மேற்கூரை பகுதிக்கு விறு விறுவென ஏறிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அதனை கண்டு கொள்ளாமல் வடமாநில வாலிபர் சட்டையை கழற்றி கையில் வைத்தபடி கிழே குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை..! என்ன நடந்தது?

பின்னர், அவர்கள் வடமாநில வாலிபரிடம் பேச்சு கொடுத்து கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், அந்த வாலிபர் இந்தியில் பேசியதாலும், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தமிழில் பேசியதாலும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், வாலிபர் கீழே குதித்தால் காப்பாற்றுவதற்காக அங்கு பெரிய வலையை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், அந்த வாலிபர் திடீரென மேற்கூரையின் மற்றொரு பக்கத்துக்கு ஓடி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் தலை, கை, காலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அவரது புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

9 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா?

Mon Jul 18 , 2022
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூலை 18) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கோவை, […]
மக்களே உஷார்..!! அதி கனமழை..!! 3 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

You May Like