அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க வரும் 26 ம் தேதி முகாம் நடைபெற உள்ளது.
சென்னை வடகோட்டப்பிரிவின் கீழ், இயங்கும் அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண, வருகின்ற 26.09.2024 அன்று மாலை 3 மணிக்கு, அஞ்சல் துறையும் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால், எண்- 5, பழைய எண்-3, 4-வது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தபால்/மணியார்டர் தொடர்பான புகார் எனில், அனுப்பப்பட்ட தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் பெயர், முகவரி, கண்காணிப்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட புகாருடன் அஞ்சல் துறை கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின், அதனையும் இணைக்கும்படி, கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சாதாரண அல்லது பதிவுத் தபால் அல்லது மின்னஞ்சல் (dochennainorth.tn@indiapost.gov.in) மூலம் அனுப்பலாம். புகார்களை அனுப்ப கடைசி தேதி 25.09.2024 ஆகும்.