fbpx

பக்கா ஸ்கெட்ச்..!! கூலிப்படை வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய போலீஸ் மனைவி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர் வாகனத்தை திருடி விற்பனை செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரது மனைவி சித்ரா (44), தற்போது சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெகதீஷ்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், செந்தில் குமார் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் தனது தாய் பாக்கியம் வீட்டில் வசித்து வந்த செந்தில் குமார், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஜெகதீஷ்குமார் மற்றும் கமல்ராஜ் (37) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

பக்கா ஸ்கெட்ச்..!! கூலிப்படை வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய போலீஸ் மனைவி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

பின்னர், போலீஸ் விசாரணைக்கு பயந்து கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செந்தில்குமாரை கொலை செய்து, தென்பெண்ணை ஆற்றில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் அழுகிய நிலையில் செந்தில்குமாரின் உடலை, விவசாய கிணற்றில் இருந்து மீட்ட போலீசார், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். மேலும், போலீசார் விசாரணையில் செந்தில்குமாரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்எஸ்ஐ சித்ரா, பாரதிபுரத்தை சேர்ந்த பெண் சாமியார் சரோஜா (32), கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார் (21), ராஜபாண்டியன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Chella

Next Post

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியா இவர்! அம்மாடியோ!

Mon Dec 26 , 2022
கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியான திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என்று பல முக்கிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்த இந்த திரைப்படம் 2 வருடங்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரஹர்சிதா இவர் […]

You May Like