ஒரே ஒரு பொய் கூறியதால் காதலை ஏற்க காதலி மறுத்ததால் ஆத்திரம்அடைந்த இளைஞர் முகத்தில் பீர்பாட்டிலால் குத்தி முகத்தை கொடூரமாக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20) இவர் சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஹோடெலில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு மகளிர்தங்கும் விடுதியில் தங்கி அவர் பணியாற்றி வந்துள்ளார். சென்னை வேப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (25). இருவரும் ஃபேஸ்புக்கில் பழகியுள்ளனர். ஒருவருக்கொருவர் பிடித்து போனதால் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு வாட்சாப்பில் சாட் செய்து வந்தனர். பின்னர் நாளடைவில் காதலாகமாறியது.
ஆனால் இருவரும் இதை கூறிக்கொள்ளவில்லை. இந்நிலையில் கடற்படையில் வேலை செய்வதாக சோனுவிடம் தெரிவித்துள்ளான். இதை சோனுவும் நம்பியுள்ளார். ஒரு கட்டத்தில் சோனுவுக்கு சென்னைக்கு வந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.இதனால் சென்னைக்கு வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நவீன் பார்த்துக் கொண்டார். இந்நிலையில் நேரில் அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதற்கு பின்புதான் நவீன், சோனுவிடம் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட நிலையில் நவீன், தான் கடற்படையில்வேலை செய்யவில்லை என தெரிவித்திருக்கின்றார்.
இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படி பொய் சொல்லி ஏமாற்றிய உன்னை நான் நம்பமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த சண்டை பெரிதாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு சோனு சென்று கொண்டிருந்தார். அப்போது என்னை திருமணம் செய்து கொள் என்று பொதுமக்கள் சிலர் பார்க்கும்படி கெஞ்சி உள்ளான். அப்போதும் சோனு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நவீன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை சோனுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சோனு சம்பவ இடத்திலேயே மயங்கினார்.
ஆத்திரம் அடங்காத நவீன் உடைந்த பீர் பாட்டிலால் முகத்தில் கீறினான். இதையடுத்து பொதுமக்கள் அலறினர். அங்கிருந்து சிலர் ஓடி வந்து உயிருக்கு போராடிய சோனுவை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். முகத்தில் 25 தையல் போடப்பட்ட, உயிருக்கு ஆபத்தான் நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை முற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டடது. இதையடுத்து நவீனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தும் போது, ’’ சோனு விமானப் பணிப் பெண் வேலைக்காக படித்து வருகின்றார், என் காதலை புரிந்து கொள்ளவே இல்லை. நான் பொய் கூறிவிட்டேன் என்று என்னை தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழகான முகத்தை வைத்துக் கொண்டுதானே என்னை நிராகரிக்கின்றாள் . எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக நான் இவ்வாறு செய்தேன்’’ என தெரிவித்தார்.