fbpx

மதுபோதையில் இப்படியா செய்வது? அதுவும் காவல்நிலையத்தில்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திய சில இளைஞர்கள், அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் சென்ற போதை வாலிபர் ஒருவர் புகார் அளிக்க சென்றவரை அங்கிருந்து விரட்டியடித்ததோடு காவல் நிலையத்தில் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றுள்ளார்.

மதுபோதையில் இப்படியா செய்வது? அதுவும் காவல்நிலையத்தில்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

காவலர்கள் காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியேறிய நிலையில், அந்த வாலிபரை அங்கு திரண்ட சில இளைஞர்கள் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அந்த வாலிபர் அடம் பிடித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்த நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த அவரது தாய் மற்றும் தந்தை அவரை அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அந்த வாலிபர் தனது தந்தையையும் தாயையும் காலால் மிதித்து சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தந்தை மகனை காலணிகளை கழற்றி அடிக்க தொடங்கிய நிலையில், தந்தையும் மகனும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கு வந்த சிலர் உதவியுடன் பெற்றோர்கள் அந்த போதை வாலிபரை காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. தாக்குதலில் காயமடைந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதை வாலிபர் காவல் நிலையத்திற்குள் வைத்து பெற்றோரை சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தமிழகமே பரபரப்பு... அனைவரும் எதிர்பார்த்த ஜெ. மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்...!

Sat Aug 27 , 2022
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று முழு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான தகவல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனி நபர் ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறது. 500 பக்க விசாரணை அறிக்கையை சமர்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, முதல்வரிடம் கால அவகாசம் கோரினார். […]

You May Like