புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய வஸ்மிதா தனது அருகில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரிகளும் தந்தையும் கதவைத் தட்டி இருக்கின்றனர். அப்போதும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை கதவை உடைத்துக் கொண்டு திறந்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் வஸ்மிதா. இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவருக்கு சுரேஷ் என்ற காதலன் இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இறப்பதற்கு முன்னர் என்னால் இனி யாருக்கும் தொந்தரவு வராது என காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்தது. குடும்பத்தினரை பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.