fbpx

அதிர்ச்சி..!! ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த மெக்கானிக்..! விளையாட்டு காரை அனுப்பி வைத்த Flipkart..!

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் மூலம் ரூ.79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால், ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, பிளிப்கார்ட் (Flipkart) செயலியில் 79,064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமரா ஒன்றை பார்த்து, கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். கேமரா பார்சல் இன்று வந்துள்ளது. பார்சல் மிகவும் தக்கையாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகியோர் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அப்போது, அந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் இருந்துள்ளது.

அதிர்ச்சி..!! ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த மெக்கானிக்..! விளையாட்டு காரை அனுப்பி வைத்த Flipkart..!

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்த ஊழியருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. பின்னர், இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், தொழில் வளர்ச்சிக்காக ட்ரோன் கேமரா கடன் வாங்கி வாங்கியதாகவும், தற்போது இந்த ஏமாற்றம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Chella

Next Post

போலி ஆவணங்கள் தயாரித்து பல கோடி மோசடி செய்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்..!

Mon Sep 26 , 2022
சென்னை, மேடவாக்கம், பாபு நகர் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (50). இவர், சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் நிலம் விற்பதாக கூறி 65 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஜெகன்நாதன் மதுரையில் தனக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை சண்முகத்திற்கு, கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக பொது அதிகார ஆவணம் தயாரித்து, 65 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் […]

You May Like