fbpx

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை! முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதுவும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது.

அதோடு பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதி என்னவென்றால், மாதம்தோறும் குடும்பத் தடவைகளுக்கு 1500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் முதலில் இந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை திட்டத்தை அறிவித்தது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக அவர்களை பின்பற்றி திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்க உள்ளது. இந்த நிலையில் தான் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தமிழக அரசின் திட்டங்களின் பலன், குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

சட்டசபை மரபின் அடிப்படையில் ஆளுநர் உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும். அதன்படி ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் சென்ற கூட்டத் தொடர்களின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? மேலும் இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடரில் அறிவிக்கவுள்ள துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்தும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அதிகரிப்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

கோமா நிலைக்கு சென்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்..!! சிகிச்சை பலனின்றி பலி..!!

Wed Jan 4 , 2023
ஆலங்குளத்தில் இரண்டரை வயது சிறுமி கோமாக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தலைமறைவான கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடிவருகின்றனர். ஆலங்குளம் அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற திலீப் குமார், ஹேமலதா ஆகியோர் ஹாசினி என்ற இரண்டரை வயது குழந்தையுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு […]
கோமா நிலைக்கு சென்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்..!! சிகிச்சை பலனின்றி பலி..!!

You May Like