fbpx

’’என்னை பின்தொடர்ந்து வந்த கறுப்பு உருவம், கீழே குதி என்றதால் குதித்தேன்’’ – தற்கொலை முயற்சி செய்த மாணவி பகீர்…!!

பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்துதற்கொலை முயற்சிசெய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தூத்தக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சாயர்புரம். இதில் செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து . இவர் மகள் சந்திய வேணி அப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்த வருகின்றார்.

நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற அவர் அனைத்து மாணவர்களிடம் சகஜமாக இருந்துள்ளார். இந்நிலையில் உடற்கல்வி பீரியடின்போது அவர்மட்டும் தனியாக செல்வதை ஆசிரியர்கள் கவனித்துள்ளனர். சொல்லாமல் எங்கே செல்கின்றாள் என யோசனையில் ஆசிரியர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முதல் தளத்தில் மதில்மீது ஏறி நின்று குதித்தார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த சந்திய வேணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவர் அபாய கட்டத்தில் இல்லை எனவும் தெரிவித்தனர். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப்படித்த மாணவி கடந்த ஒரு மாதகாலமாக வீட்டில் இருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றார். இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசில் புகார்அளித்தனர். போலீசார் பள்ளியில் யாராவது திட்டினார்களா? எதற்காக குதித்தாய் என்ற கோணத்தில் கேள்வியைத் தொடங்கினர். ஆனால், மாணவி கூறிய பதில் போலீசையே பீதியில் ஆழ்த்தியது. தன்னை ஒரு கறுப்பு உருவம் பின் தொடர்ந்ததாகவும் எப்போதும் அது தொல்லை கொடுப்பதாகவும் என்னை முதல் தளத்திற்கு அதுதான் வர சொன்னதாகவும் அது என்னை குதிக்க சொன்னதால் குதித்தேன் என தெரிவித்துள்ளார்.

நானே வருவேன் படத்தின் தொடக்கத்தில் சில காட்சிகள் மர்மமாகவே காட்டியிருப்பார்கள். அதில் தனுஷின் மகள் தனியாக பேசிக்கொண்டே இருப்பார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் மாடியின் மீது ஏறி நின்று குதிக்க தயாராவார். என்னை ’சோனு’ குதிக்க சொல்கின்றான். என கூறியதைக் கேட்டதும் தனுஷ் ஷாக் ஆவார்.

படத்தில் இதை பார்த்திருப்போம் ஆனால் நிஜத்திலும் அது போன்ற சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாணவிக்கு மன ரீதியாக பிரச்சனை உள்ளதா என்பது பற்றி விசாரணை நடந்து வருகின்றது.

Next Post

70 வயதான ஏழை முதியவரை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் காரணம் என்ன?

Thu Nov 17 , 2022
70 வயதான ஏழை முதியவரை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் எதற்காக இந்த திருமணம் நடந்தது என இந்த ஜோடி தகவல் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானில் 19 வயது இளம்பெண் ஒருவர் 70 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் தனித்துவமான காதல் கதை சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. 70 வயதான ஏழை முதியவரான லியாகத் அலி (70) இவர் ஷூமைலாஅலி (19) […]

You May Like